கோலாலம்பூர், நவம்பர்-4 – கடந்தாண்டு மே மாதம் மாற்றுத் திறனாளியான e-hailing ஓட்டுநரைத் தாக்கி காயம் விளைவித்ததை, அதி முக்கியப் புள்ளி ஒருவரது பாதுகாப்புக்காக உடன் செல்லும் போலீஸ்காரர் இன்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து 32 வயது லான்ஸ் கார்ப்பரல் Muhammad Taufik Ismail-லுக்கு கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கக் கூடிய குற்றவியல் சட்டத்தின் 323-வது பிரிவின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
கடந்தாண்டு மே 28-ஆம் தேதி பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஹோட்டலொன்றின் வரவேற்பறை வெளியே 47 வயது Ong Ing Keong-கை வேண்டுமென்றே அடித்து காயப்படுத்தியதாக Tawfik குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.