Latestஉலகம்

மாலத்தீவில் RM3.7 மில்லியன் போதைப் பொருள் கடத்தல் முயற்சி; இரு மலேசியர்கள் கைது

புதுடில்லி, ஜூலை 30 – மாலத் தீவு நாட்டில் 3.7 மில்லியன் ரிங்கிட் போதைப் பொருள் கடத்த முயன்ற இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து சனிக்கிழமை காலையில் எமிரெட்ஸ் EK 656 விமானம் மாலத்தீவின் Velana அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தபோது 44 வயதுடைய மலேசியரின் பயணப் பெட்டியில் 15 கிலோ கஞ்சா இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுப் பிடித்தனர். 3.7 மில்லியன் ரிங்கிட் அல்லது மாலத்தீவின் 12.3 மில்லியன் rufiyaa மதிப்பை அந்த போதைப் பொருள் கொண்டிருந்ததாக போலீஸ் சூப்பிரின்டென்டன் முகமட் அப்ஷால் ( Mohamed Afzal) தெரிவித்தார்.

அந்த போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து மற்றொரு மலேசிய பிரஜையான 41 வயது ஆடவரும் ஜூலை 28ஆம் தேதி இரவில் கைது செய்யப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் முகமட் அப்ஷால் குறிப்பிட்டுள்ளார். அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அனைத்துலக சட்டத்தை சேர்ந்த அமலாக்க அதிகாரிகளுடன் நாங்கள் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறோம் என மாலத்தீவு தலைமை இன்ஸ்பெக்டர் ஹமிட் வாஹிட் ( Ahmed Waheed ) தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!