ஷா ஆலம், ஏப்ரல் 24 – ஷா ஆலம், மிட்லண்டஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மிட்லண்டஸ் பள்ளியின் மாணவர்களின் சங்கம், LPS மற்றும் Knight & Castle Enterprise-யுடன் கைகோர்த்து தேசிய அளவிலான மூன்றாவது சதுரங்க போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்திய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சதுரங்க போட்டியில் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலிருந்தும் சுமார் 1,200 மாணவர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்த இப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்களுக்கான ஒரு தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்டு வருவதாகக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இளங்கோவன் முனியாண்டி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
Voice note
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த போட்டியில் சிறந்த விளையாட்டு திறனை வெளிபடுத்தி சித்தியவான், Sungai Wangi 2 தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. சிலாங்கூர், சிப்பாங் லிமா தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையை தட்டிச் சென்ற நிலையில், banting, Jenjarom தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையை பிடித்தது.
தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டிக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Paparaidu, சிகாமட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் YB Yuvaneswaran, தேசிய தலைமை ஆசிரியர்கள் பேரவையின் தலைவர் SS Paandian மற்றும் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் உதயசூரியன் உட்பட பள்ளியின் தலைமையாசிரியரும் கலந்து கொண்டனர்.