
செப்பாங், அக்டோபர்-16,
KLIA Terminal 1 முனையத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில், 2 Aerotrain இரயில்களிலும் மின்சார தடை ஏற்பட்டதால், அச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
உடனடியாக பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, விமான நிலையக் குழு பயணிகளை பாதுகாப்பாக முனையத்திற்கு அழைத்துச் சென்றது.
ஒரு இரயிலின் சேவை இரவு 9.27 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது, மற்றொரு இரயிலின் பழுதுபார்ப்பு அப்போது தொடர்ந்து நடைபெற்று வந்தது.
எனினும், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், பயணிகளின் நடமாட்டம் தடைப்படாமல் உறுதிசெய்யப்பட்டது.
சம்பவத்துக்கானக் காரணத்தை கண்டறிய முழு விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய விமான நிலையங்கள் நிறுவனமான MAHB கூறியது.
ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு பயணிகளின் பொறுமைக்கும் புரிதலுக்கும் அது நன்றித் தெரிவித்துக் கொண்டது.