Latestமலேசியா

மின்வாகன பேட்டரி சேமிப்பு அறையில் தீ: காயங்களுடன் உயிர் தப்பிய ஆடவர்

ஜார்ஜ்டவுன், அக்-12–பினாங்கு, Jalan Jelutongங்கில் மின்சார வாகன (EV) பேட்டரி சேமிப்பு அறையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற 31 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.

அச்சம்பவம் தொடர்பில் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று பிற்பகல் 3.42 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவிச் செயல்பாட்டு இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார். சுமார் 10 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அந்த பேட்டரி சேமிப்பு அறை, தீயில் ஏறக்குறைய 85 விழுக்காடு சேதமடைந்தது. மாலை 4 மணிக்குத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 4.10 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.

வேறு ஆபத்துகள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்பணிகள் 5.57 நிறைவடைந்தன. அச்சம்பவம் குறித்து தீ விபத்து விசாரணைப் பிரிவு விசாரிக்கவிருக்கிறது.

தீயை அணைக்க முயன்றபோது காயமடைந்த ஆடவருக்கு அவசர மருத்துவ மீட்புச் சேவைக் குழுவினர் முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!