ஷா அலாம், ஜூலை 28 – மின் இணைப்பு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை மையத்தின் செயல்பாடு ஜூலை 22ஆம்தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நோயாளிகள் எவரும் சிரமத்திற்கு உள்ளாகுவதை தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத்துறையின் இயக்குனர் Dr Ummi Kalthom Shamsudin தெரிவித்திருக்கிறார். அந்த மின் இணைப்பு முறையின் கோளாறை சரிசெய்வதற்காக பொதுப் பணித்துறை காண்காணிபோடு குத்தகையாளர் பரிசோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
இருதய அறுவை சிகிச்சை மையத்தின் நடவவடிக்கை தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தனது இருதய அறுவைச் சிகிச்சை நடவடிக்கையை பிரதான கட்டிடத்தில் உள்ள இரண்டு அறுவை சிகிச்சை மண்டபத்திற்கு சுல்தான் இட்ரிஷ் இருதய அறுவை சிகிச்சை மையம் மாற்றியுள்ளதோடு , அந்த இடம் 24 மணி நேரமும் செயல்படும்.
மேலும் இருதய அறுவைச் சிகிச்சைக்கு நோயாளிகள் காத்திருக்கும் கால அவகாசத்தை குறைப்பதற்காக ஜூலை 18 ஆம் தேதியிலிருந்து இருதய நோயாளிகளுக்கான வசதியை Protect Health Corparation தனியார் மருத்துவ பகுதிக்கு மாற்றியிருப்பதாகவும் Ummi Kalthom வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.