Latestமலேசியா

மின் வர்ததக தளத்தில் செயல்பட்ட வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், ஜூலை 25 – மின் வர்த்தகத் தளத்தில் செயல்பட்டு வந்த வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒன்பது தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14 மற்றும் 16 வயதுடைய இருவர் உட்பட நால்வர் Call சென்டரில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக புலாய்வுத்துறைத் இயக்குனர் Datuk Seri Ramli Mohamed Yoosuf  தெரிவித்தார். அவர்கள் Call சென்டரில் வாடிக்கையாளர்களை அழைத்து பேசுவது மற்றும் தரவு நிர்வாகிகளாக பணியாற்றி வந்தனர். கைதான நபர்களிடமிருந்து 18 கைதொலைபேசிகள், நான்கு மடிக் கணினிகள், ஐந்து கணினிகள் ஆகியவை உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜனவரி மாதம் முதல் இந்த சந்தேகப் பேர்வழிகள் செயல்பட்டு வந்துள்ளதோடு Taobao மற்றும் JD.com போன்ற பிரபலமான மின் வர்த்தக தளங்களை பயன்படுத்தி சீனாவைச் சேர்ந்தவர்களை கவரும் நோக்கத்தில் செய்பட்டுள்ளனர் என ரம்லி கூறினார். கைதான ஒன்பது பேரில் ஐவர் ஜூலை 26ஆம்தேதிவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதர நால்வர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!