
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – கடந்த நவம்பர் 28ஆம் திகதி காலமான முன்னாள் தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணனுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை, லோக் இயூ இந்து மின் தகனச்சாலையில் இறுதிச் சடங்கிற்குப் பிறது, அவரது நல்லுடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று பிரிக்ஃபீல்ட்ஸ் வட்டாரத்தில் இருக்கும் அவரது வீட்டில், அன்னாரின் நல்லுடல் பிற்பகல் 5 மணியிலிருந்து, இரவு 9 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
மறைந்த ஆனந்த கிருஷ்ணன் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ், செய்ற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆகியவற்றை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.