Latestமலேசியா

முதலீட்டு மோசடியில் 9 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஈப்போ ஆடவர்

ஈப்போ, ஜூன்-25 – போலி முதலீட்டுத் திட்ட மோசடிக்கு ஆளாகி 9 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார் ஈப்போவைச் சேர்ந்த ஆடவர்.

Facebook-கில் விளம்பரத்தைப் பார்த்து அதிலிருந்த link-கைத் தட்டிய 51 வயது அந்நபர், whatsapp மூலமாக ஒருவருடன் அறிமுகமானார்.

அவர் பேச்சை நம்பி மே மாதம் இரு தடவை என இரு வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 9 லட்சத்து 4 ஆயிரம் ரிங்கிட்டைப் போட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட நபர்.

ஆனால், முதலீடு செய்த பணத்திற்கு சொன்னபடி வட்டியோ, இலாப ஈவோ வராததால், தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.

மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி ( Datuk Seri Mohd Yusri Hassan Basri ) தெரிவித்தார்.

பெரும் பணத்தை முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் மோசம் போக வேண்டாம் என பொது மக்களை அவர் மீண்டும் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!