மூவார், மே-24 -மே 20 முதல் காணாமல் போயிருக்கும் 12 வயது சிறுமி திரியாஷினி முரளி கிருஷ்ணாவைத் தேடுவதில் ஜொகூர், மூவார் போலீஸ் பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளது.
பஞ்சூர், தாமான் பாகோவைச் சேர்ந்த திரியாஷினி திங்கட்கிழமை காணாமல் போனதாகக் கூறி மூவார் போலீஸ் நிலையத்தில் முன்னதாக புகார் செய்யப்பட்டதை, மாவட்ட போலீஸ் தலைவர் உறுதிபடுத்தினார்.
திரியாஷினியைப் பார்த்தவர்கள் அல்லது அச்சிறுமி இருக்கும் இடம் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரியான Inspektor Amy Ng-ஙை 016-6870718 என்ற கைப்பேசி எண்களில் நேரடியாகத் தொடர்புக் கொள்ளலாம்.
அல்லது மூவார் மாவட்ட போலீஸ் நிலையத்தை 06-9564800 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பொது மக்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களையும் தொடர்புக் கொண்டு உதவலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.