Latestமலேசியா

மூவாரில் தீ விபத்தில் வயதான தம்பதியும் 11 வயது பேத்தியும் மரணம்

மூவார் , ஆக 9 – இன்று அதிகாலையில் மணி 1.30 அளவில்    மூவார், Kampung Paya Redan, Jalan Sekolah வில் உள்ள தங்களது வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் வயதான ஒரு தம்பதியரும், அவர்களது     11 வது பேத்தியும்   இறந்தனர்.  

82 வயதுடைய   முகமட்  நோர்  யாசின் (Mohamad Nor  Mohamad   Yassin ), அவரது மனைவியான  76 வயதுடைய  அரா அப்துல் ஹமிட் ( Ara  Abdul  Hamid )  ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர்.  அவர்களது பேத்தியான   நோராடிரான நோர் ஹிசாம்   (Noradriana Nor Hisyam ) சுல்தானா பாத்திமா  நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மரணம் அடைந்தார்.  

அந்த தம்பதியரின் மற்றொரு பேரப் பிள்ளையான  14 வயது   நோரஷிமா முகமட்  ரடி (Norazima Mohd Radhi)  தலையில்  ஏற்பட்ட  காயத்தினால் தற்போது சுல்தானா   பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த தீ விபத்தில் அவர்களது வீடு  85 விழுக்காடு அழிந்ததோடு  அத்தீவிபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மூவார்  மாவட்ட போலீஸ் தலைவர்   ACP  ரைஸ்  முக்லிஸ் அஸ்மான்  அஸிஸ்  ( Raiz Mukhliz Azman Aziz) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!