
கிள்ளான், மார்ச்-6-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்து கலவரத்தில் ஈடுபட்டதாக, 3 ஆடவர்கள் மீது இன்று மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும் மூவரும் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினர்.
அதில் இருவர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இருவரும் தலா 13,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இன்னொருவர் மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 9,000 ரிங்கிட் ஜாமீன் தொகையில் விடுவிக்கப்பட்டார்.
வரும் மே 25-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
ஒரு வீடமைப்புத் தளத்தில் பாதுகாப்புப் பகுதிக்கு ஏற்பட்ட போட்டாப் போட்டியால் முன்னதாக சண்டை மூண்டதாக கூறப்பட்டது.
கைதான அனைத்து சந்தேக நபர்களும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்றும், குண்டர் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிலாங்கூர் போல்லிஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar கூறியிருந்தார்.



