Latestமலேசியா

மேற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்த காட்டுத்தீ; 3 தீயணைப்பு வீரர்கள் பலி; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

பிரான்ஸ், ஜூலை 24 – கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்றால் மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்த பேரழிவில் 3 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 30,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்சில், அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகளிலுள்ள முகாம்கள் மற்றும் விடுமுறை இல்லங்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலைமையைச் சமாளிக்க பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) அவசர உதவி கோரியுள்ளதுடன், 3 நீர் குண்டுவீச்சு விமானங்களை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், ஸ்பெயினில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இத்தாலியில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!