Latestமலேசியா

மோன்த் கியாராவில் வர்த்தகர் சுட்டுக் கொலை; 4 ஆண்டுகள் தலைமறைவான ஆடவன் மீது குற்றச்சாட்டு

கோலாலாம்பூர், மார்ச்-27-2022-ஆம் ஆண்டு Mont Kiara-வில் ஒரு வர்த்தகரைச் கொலைச் செய்து விட்டு 4 ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த வேலையில்லாத ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவருடன் இணைந்து, 63 வயது Goh Chok Chuan என்பவரை சுட்டுக் கொலைச் செய்ததாக, 39 வயது ஆடவர் குற்றம் சாட்டப்பட்டார்.

2022 ஜூலை 11-ஆம் தேதி Amarin Kiara குடியிருப்புப் பகுதியின் பாதுகாவலர் சாவடிக்கு அருகே இருந்த வாகன நிறுத்துமிடத்தில் அக்கொலை நடந்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

கொலைக் குற்றம் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் வருவதால், சந்தேக நபரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

அவ்வாடவருக்கு ஜாமின் வழங்காமல், வரும் ஜூன் 8-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.

ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைதண்டனையுடன் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

அவரின் 3 சகாக்கள் ஏர்கனவே குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டதால், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!