ம.இ.காவின் தேசிய மகளிர் பிரிவின் தலைவி பதவிக்கு ஜோகூர் ம.இகா தலைவியும் அம்மாநிலத்தின் kemelah சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான N.சரஸ்வதி போட்டியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
30 ஆண்டு காலத்திற்கும் மேலாக அரசியலில் அனுபவத்தை கொண்டிருப்பதால் ம.இ.காவின் தேசிய மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு தலைமையேற்பதற்கு தாம் தயாராய் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதோடு, தலைமைத்துவத்தின் அனுமதியையும் தாம் பெற்றுள்ளதாகவும், அதன் பின்னரே அடுத்த தவணைக்கான ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு போட்டியிடுவதற்கு முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய அனுபவத்தோடு இந்த மகளிர் பிரிவு தலைவி பதவி இருப்பின் தொழில்துறை, கல்வி மற்றும் தொழில்முனைவர் துறைகளிலும் பெண்களை மேம்படுத்த முடியும் என அவர் உறுதியளித்துள்ளார். பல ஆண்டுகளாக அரசியலில் இருந்துள்ளதோடு வர்த்தக பின்னணியும் மற்றும் அரசு சார்பற்ற இயக்கத்தையும் நடத்தி வருவதால் கட்சியின் மகளிர் தலைவியாக சேவையாற்ற முடியும் என இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சரஸ்வதி இவ்வாறு கூறினார்