கோலாலம்பூர், ஜூலை 6 – இன்று நண்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணிவரை ம.இ.காவின் மூன்று உதவித் தலைவர்கள், மத்திய செயலவை மற்றும் மாநில ம.இகா நிர்வாகக் குழுவுக்கான 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேசியத் தலைவராக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணைத்தலைவராக டத்தோ ஶ்ரீ சரவணன் போட்டியின்றி முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
இத்தேர்தலில் மிகவும் சூடு பிடித்துள்ள மூன்று உதவித்தலைவர்களுக்கான போட்டிக்கு டத்தோ முருகையா, டத்தோ மோகன், டத்தோ நெல்சன், டத்தோ அசோஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் ஏறக்குறைய 18,000 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நண்பகல் ஒரு மணி தொடங்கி மாலை 5 மணிவரை நாடு முழுவதிலும் 39 மண்டலங்களில் வாக்களிப்பு நடைபெறும்.
அதன் பின் மாலை மணி 5.30 முதல் வாக்குகள் எண்ணப்பட்டு இன்றிரவு முடிவுகள் அறிவிக்கப்படும் என ம.இ.காவின் தலைமைச் செயலாளர் டத்தோ R. T ராஜசேகரன் தெரிவித்தார்.