Latest
யொங் பெங் R&R பெண்கள் கழிவறைக் குப்பை தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு

பத்து பஹாட், ஜனவரி-5,
ஜோகூர், யொங் பெங் R&R ஓய்வெடுக்கும் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில், புதிதாகப் பிறந்த ஆண் சிசுவொன்று உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.
குழந்தை முழுமையாக உருவான நிலையில் இருந்ததோடு, உடலுடன் தொப்புள் கொடி இணைந்திருந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் உடல், பத்து பஹாட் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், பொது மக்கள் ஏதேனும் தகவல் இருந்தால், ஜோகூர் போலீஸ் hotline 07-2212 999 அல்லது பத்து பஹாட் போலீஸ் நிலையத்தை 07-434 3999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



