கோலாலம்பூர், மே 21 – KTMB எனப்படும் Keretapi Tanah Melayu Berhad பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தின் நலன்களை கருத்திற்கொணடு சிறப்பு வாடகை ரயில் சேவைக்கான வழிகாட்டுதல்களை மேம்படுத்தவிருக்கிறது. கடந்த வியாழக்கிழமையன்று கோலாலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து Serendah வரையிலான இருவழி பயணத்தில் ஈடுபட்ட
Pinkish ஆண்டு நினைவு விழாவின்போது விடப்பட்ட சிறப்பு வாடகை ரயில் சேவையின்போது ஏற்பாடு செய்யப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி சர்ச்சைக்கு உள்ளானதை தொடர்ந்து வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்படும் என KTMB வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புகைப் பிடிக்கக்கூடாது, மது மற்றும் போதைப் பொருள் போன்றவை பயன்படுத்தக்கூடாது என்பதோடு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளை KTMB நிர்ணயித்திருந்ததோடு இதனை எங்களது வாடிக்கையாளர்களும் ஏற்றுக்கொண்டனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கோலாலம்பூரிலுள்ள ரயில் நிலையத்தில் KTMB சிறப்பு வாடகை ரயிலில் பயணிகள் விருந்தில் கலந்துகொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.