Latestமலேசியா

ரயில் தண்டவாள பகுதியில் ரோந்து நடவடிக்கையை KTMB தீவிரப்படுத்தும்

கோலாலம்பூர், ஜன 31 – எதிர்காலத்தில் ரயில் தண்டவாள பகுதிகளில் அத்துமீறல் சம்பவங்களைத் தடுக்க, குறிப்பாக அதிகமாக மக்கள் ஊடுவிய பகுதிகளில், உதவி போலீஸ்காரர்களின் துணையுடன் கட்டுப்பாடு மற்றும் ரோந்துப் பணியை KTMB எனப்படும் மலேயன் ரயில்வே அதிகரிக்கவிருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாட்டு வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சட்ட அமலாக்கத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்த APAD எனப்படும் தரை பொது போக்குவரத்து நிறுவனத்துடன் கே.டி.எம்.பி மேலும் விவாதங்களை நடத்தும் என KTMB யின் நடவடிக்கை பிரிவின் தலைமை அதிகாரி முகமட் ஜைய்ன் மாட் தஹா ( Mohd Zain Mat Taha) கூறினார்.

ரயில் தண்டவாள பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுக்கும் முயற்சியில் தற்போதுள்ள சட்டத்தை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் சேவைகள்தான் எப்போதும் எங்கள் முன்னுரிமை என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சம்பவத்தில், காலை மணி 6.39க்கு ஜாலான் Kastam ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் தெலுக்கு புலாய் மற்றும் கிள்ளான் இடையே 34.734 கிலோமீட்டரில் ஊடுருவிய நபர் மீது மோதியதால் நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தினால் 60 நிமிடங்களுக்கு மேல் பயணிகள் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!