
ஜெய்பூர், அக்டோபர்-15,
இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உடல் கருகி மாண்டனர்.
short circuit மின்சாரக் கோளாறால் அந்தத் தனியார் பேருந்தின் பின்புறத்தில் முதலில் தீப்பற்றியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஓட்டுநர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்த முயன்றாலும், தீ வேகமாக பரவி பயணிகள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்தார்.
16 பேர் மோசமான தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிகாரிகள் DNA பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.
பேருந்து பாதுகாப்பு விதிகள் மற்றும் ஆபத்து அவசர நேரத்தில் வெளியேறும் வழிகள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
இத்துயரச் சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.