ரெம்பாவ், மே 25 – Jalan Seremban – Tampin சாலையின் 36. 4 ஆவது கிலோமீட்டரில் மலேசிய ராணுவத்தின் பீரங்கி வாகனம் உட்பட நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் காயம் அடைந்தனர் என Rembau மாவட்ட போலீஸ் தலைவர் துணை Superintendan Shaik Abdul Kadar Shaik Mohamad தெரிவித்தார். ராணுவத்தின் Gempita பீரங்கி வாகனத்துடன் ஒரு புரோட்டோன் சாகா கார், Proton Saga FLX மற்றும் Perodua Axia வும் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக அவர் கூறினார்.
29 வயது பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற Perodua Axia கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு 48 வயது பெண் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா காரில் மோதியது. அதனை தொடர்ந்து 45 வயதுடைய ஆடவர் ஒட்டிய புரோட்டோன் சகா FLX கார்
புரோட்டோன் சகாவின் பிற்புறம் மோதி எதிரே உள்ள சாலையில் நுழைந்ததால் அக்கார் பீரங்கி வாகனத்தில் மோதியது. இதனால் அக்காரில் இருந்த இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் Rembau மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக Shaikh Abdul Kadar தெரிவித்தார்.