கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – கூகளில் (Google) மலேசிய ரிங்கிட்டுக்கான நாணைய மாற்றி விட்ஜெட்டை (widget) முடக்குமாறு அந்த இணையத் தேடல் நிறுவனத்திற்கு தாம் உத்தரவேதுமிடவில்லை என தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) தெளிவுப்படுத்தியுள்ளார்.
அது, மத்திய வங்கியான பேங்க் நெகாராவுடன் கலந்தாலோசித்து கூகள் மலேசியாவே (Google Malaysia) எடுத்த முடிவு என, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர் சொன்னார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு கூகளில் தவறாக காட்டப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து கூகள் அம்முடிவுக்கு வந்தது.
அதில் தமது உத்தரவு ஏதுவும் கிடையாதென்றார் அவர்.
FX தரவு வழங்குநருடன் கூகள் தரப்பில் இன்னமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனியும் இது போன்ற தவறுகள் நடக்காது என கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டவுடன், மறைக்கப்பட்ட அந்த வசதி மீண்டும் பயனர்களுக்கு காட்டப்படும் என கூகள் தெரிவித்திருப்பதாக ஃபாஹ்மி கூறினார்.
கூகள் search box-சின் ‘currency exchange’ பகுதியை மூடுமாறு ஃபாஹ்மியே உத்தரவிட்டதாக X தளத்தில் பயனர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.