புத்ரா ஜெயா, மே 28 – ஞாயிற்றுக்கிழமையன்று வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காள கடற்கரைகளுக்கு இடையே கரையைக் கடந்த Remal சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து Dhaka மற்றும் புதுடில்லியிலுள்ள தூதரகங்கள் மூலம் நிலைமையை மலேசிய வெளியுறவு அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவு மற்றும் ஆலோசனைகளை பின்பற்றும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் Dhakaவில் எண் 19, Road No 6, Baridhara , Diplomatic Enclave, Dhaka என்ற முகவரியில் உள்ள மலேசிய தூதரகத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் +88 018 4179 8077 என்ற தொலைபேசி எண் மற்றும் mwdhaka@kln.gov.my என்ற மின் அஞ்சல் முகவரியிலும் மலேசிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
அதே வேளையில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மலேசியர்கள் புதுடில்லியில் 50-M, Satya Marg, Chanakyapuri, New Delhi அல்லது +91 859 5550594 தொலைபேசி எண் மற்றும் mwdelhi@kln.gov.my என்ற மின்அஞ்சல் மூலமாகவும் மலேசிய தூதரகத்துடன் தொடர்புகொள்ளலாம் . வங்காளதேசத்தில் கரையோர மாவட்டங்களில் புயல் காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் இருவர் மரணம் அடைந்தனர். வெப்பமண்டல சூறாவளியால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆகக்கடைசியான நிலவரங்கள் குறித்த தகவலையும் பொதுமக்களுக்கு வெளியுறவு அமைச்சு தெரிவிக்கும் என்று அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.