
ரெம்பாவ், ஜூலை-12 – 30 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து இன்று அதிகாலை ரெம்பாவ் அருகே PLUS நெடுஞ்சாலையில் டிரேய்லரை மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 4 பெண் பயணிகள் சிறியக் காயங்களுக்கு ஆளாகினர்.
அதிகாலை 2.50 மணியளவில் அவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
மீட்புக் குழு வருவதற்குள் அனைத்துப் பயணிகளும் தாங்களாகவே பேருந்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.
காயமடைந்தவர்களுக்கு அம்புலன்ஸ் வரும் வரை சம்பவ இடத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டன.
விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.