ரொம்பின், ஆகஸ்ட்-14 – பஹாங், ரொம்பினில் கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் மிதித்து இந்தோனீசிய ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 9-ம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் 44 வயது அந்நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இறந்து போன ஆடவரை முன்னதாக 3 காட்டு யானைகள் துரத்தியதைக் கண்டதாக புகார்தாரர் போலீசிடம் தெரிவித்தார்.
இதனால் அலறிப் போன அவரும் அவரின் நண்பரும் உதவிக் கோரி ஓடியிருக்கின்றனர்.
சுமார் 2 மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, யானைகள் மிதித்து அவ்வாடவர் இறந்து கிடந்ததாக புகார்தாரர் சொன்னார்.
இறந்த நபரின் உடல் சவப்பரிசோதனைக்காக ரொம்பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அச்சம்பவம் குறித்து வனவிலங்குத் துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கூறியது.