Latestமலேசியா

லங்காவியை முஸ்லீங்களுக்கு விருப்பமானது என முத்திரை குத்துவதா ? ம.சீ.ச கண்டனம்

கோலாலம்பூர், ஜூன் 26 – அண்மையில் சுற்றுலாத்துறை துணை அமைச்சர் கைருல் பிரடவுஸ் அக்பர் கான் (Khairul Firadaus Akhbar Khan) செய்துள்ள பரிந்துரையின்படி , லங்காவியை முஸ்லிம்கள் விரும்பும் இடம் என்று முத்திரை குத்தினால், சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என்று MCA இன்று எச்சரித்துள்ளது. இந்த ஆலோசனை குறுகிய மன்பான்மை கொண்டதாக இருப்பதோடு தொலைநோக்கு இல்லாதது என ம.சீ.சவின் துணைத் தலைவர் வீ ஜெக் செங் (Wee Jeck Seng  ) கண்டம் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், வரியற்ற கொள்கைகள் மற்றும் அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற இடமாக லங்காவி புகழ் பெற்றுள்ளது. முஸ்லீம் சுற்றுலாவுக்காக லங்காவியை வரையரைப்படுத்துவது அந்த தீவின் சுற்றுலா குறைத்து நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று தஞ்சோங் பியா (Tanjung Pia ) நாடாளுமன்ற உறுப்பினருமான வீ ஜெக் செங் கூறினார்.

லங்காவியை முஸ்லீம்களுக்கு விருப்பமானது என முத்திரை குத்துவது, மலேசியாவுக்கு வருகை புரியும் 2026 ஆம் ஆண்டுக்கு இவ்வட்டாரத்தில் உள்ள மற்ற தீவுகளுடன் போட்டியிட உதவும் என கைருல் திங்கட்கிழமையன்று கூறியிருந்தார். லங்காவியின் தற்போதைய பலம் மற்றும் அனைத்துலக நற்பெயருக்கு எதிராக அதிகமான சமய மத அல்லது பழமைவாதக் கொள்கைகள் அந்த சுற்றுலா தீவை தவறாக சித்தரித்தது, தேசிய சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அனைத்து சுற்றுப் பயணிகளிடம் லங்காவி பிரபல சுற்றுலா மையம் என்பதை தற்கவைப்பதற்கு அதன் பன்முகத்தன்மையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வீ ஜெக் செங் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!