Latestமலேசியா

லங்காவி பந்தாய் செனாங் கடலில் சகோதரியை காப்பாற்ற முயன்ற 15 வயது பையன் மூழ்கி மரணம்

அலோஸ்டார், ஜூலை 28 – லங்காவியில் Pantai Cenang கடலில் குளித்துக் கொண்டிருந்த தனது இளைய சகோதரியை காப்பாற்ற முயன்ற 15 வயது பையன் ஒருவன் மூழ்கி மாண்டான். நேற்று மலை மணி 3.05 அளவில் நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில் முகமட் இஷாம் ஹாக்கிமி அஸிசி ( Muhammad Izzham Hakime Azizi ) மூழ்கியதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ACP Shariman Ashari தெரிவித்தார்.

Muhammad Izzham Hakimie ,அவனது மைத்துனர், இரண்டு சகோதரிகள் தனது சகோதரியின் பிறந்த நாளை முன்னிட்டு தங்களது உல்லாசப் பொழுதை கழிக்க pantai Cenang கடற்கரைக்கு சென்றனர்.

அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது தனது சகோதரி நீரில் அடித்துச் சென்றதை கண்டு அவரை முகமட் இஷாம் காப்பாற்ற முயன்றுள்ளார்.

அந்த சம்பவத்தின்போது மீட்கப்பட்ட மூவர் லங்காவியிலுள்ள Sultanah Maliha மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே காணாமல்போன முகமட் இஷாமை தேடும் நடவடிக்கையில் லங்காவி போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள், அதிகாரிகள், மலேசிய தீயணைப்பு மீட்புத்துறை, மலேசிய கடல் அமலாக்கத்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் என சுமார் 43 பேர் ஈடுபட்டனர். இன்று காலை 10.08 மணியளவில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!