லண்டன் கிளாசிக் ஸ்குவாஸ் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்று சிவசங்கரி சாதனை
கோலாலம்பூர், ஏப் 2- London Classic ஸ்குவாஸ் போட்டியில் உலகின் 13 ஆம் நிலை ஸ்குவாஸ் விளையாட்டாளரான மலேசியாவின் Sivasangkari வெற்றியாளர் பட்டத்தை வென்று சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த போட்டியில் இறுதியாட்டத்தில் தமக்கு கடும் மிரட்டலாக விளங்கிய உலகின் இரண்டாம் நிலை ஸ்குவாஸ் வீராங்கனையான எகிப்தின் Hania El Hammamy யை 11-9, 5-11, 13-11. 12-14, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் சிவசங்கரி வென்றார். சுமார் 81 நிமிடங்கள் நடத்திய கடுமையான போராட்டத்திற்குப் பின் இந்த வெற்றியை அவர் பெற்றார். இதற்கு முன் Hanna வுடன் ஆறு முறை மோதியிருக்கும் சிவசங்கரி இரண்டாவது முறையாக அவரை வீழ்த்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக உலகின் முதல் 10 ஸ்குவாஸ் வீராங்கனைகளின் பட்டியலில் சிவசங்கரி இடம்பெற்று சாதனையை படைத்துள்ளார். London Classic ஸ்குவாஸ் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வாகைசூடுவதற்கு முன் உலகின் முதல் நிலை வீராங்கனையான எகிப்தின் Nour El Sherbnini யை காலிறுதியாட்டத்திலும், அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 4ஆம் நிலை விளையாட்டாளரான பெல்ஜியத்தின் Nele Gillis சையும் வீழ்த்தி சிவசங்கரி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.