லஹாட் டத்து, ஜூன் 21 – இரு ஓட்டுனர்கள் உட்பட 19 பேருடன் பயணித்த விரைவுப் பேருந்து ஒன்று, சபா, லஹாட் டத்து, ஜாலான் சிலாமில், கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
எனினும், அப்பேருந்தில் பயணித்த நால்வர் மட்டுமே காயம் காரணமாக லஹாட் டத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்கள் சிராய்ப்பு காயங்களுக்கு மட்டுமே இலக்கானதாக, லஹாட் டத்து தீயணைப்பு மீட்புத் துறை தலைவர் சும்சோவா ரஷித் (Sumsoa Rashid) தெரிவித்தார்.
நேற்றிரவு மணி 9.24 வாக்கில், செம்போர்னாவிலுருந்து (Semporna), கோத்தா கினபாலு நோக்கி பயணமான அப்பேருந்து, சுமார் 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
சம்பவத்தின் போது, அப்பேருந்தில் இருந்த சிலர், காயம் எதுவும் ஏற்படாததால் சொந்தமாகவே பேருந்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.