Latestமலேசியா

லாட்டரி கடை ஊழியரான 62 வயது மாது மீது தீ வைப்பு; தீவிர சிகிச்சை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-10-கோலாலம்பூரில் உள்ள லாட்டரி கடை ஒன்றின் வெளியே, 62 வயது மாது ஒருவர் மீது தீ வைக்கப்பட்டதில், அவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

அந்தக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வரும் அப்பெண் மீது, பெட்ரோல் எனச் சந்தேகிக்கப்படும் திரவத்தை ஊற்றித் தீ வைக்கப்பட்டது.

உடலில் சுமார் 50 விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் அவர் உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மாதுவுக்கு யாருடனும் முன்பகையோ அல்லது மிரட்டல்களோ இருந்ததில்லை என செந்தூல் போலீஸ் கூறியது.இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பிச்சென்ற நபரைக் கண்டுபிடிக்கச் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்துள்ள போலீஸார், இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!