சிரம்பான், ஆகஸ்ட் 12 – மலேசிய வேதாத்திரி SKY மனவளக்கலை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மனைவி நல வேட்பு நாள் விழா வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கணவனுக்காக மனைவிமார்கள் விரதங்கள் கடைப்பிடிப்பதைப் பார்த்திருப்போம்.
ஆனால், மனைவியருக்கு அப்படி ஒரு விரதத்தைக் கணவர்கள் கடைப்பிடிப்பதில்லை.
அந்த குறையைப் போக்கும் விதமாக மனைவியைப் பெருமைப்படுத்தும் வகையில், மனைவி நல வேட்பு நாள் விழா, லிங்கி, போட்டிக்சன் அறிவுத்திருக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறதாக கூறுகிறார் சிறைத் துறையின் முன்னாள் துணை ஆணையர் அண்ணாதுரை காளிமுத்து.
இவ்விழாவில் புதிதாக திருமணமான தம்பதிகள், முதிய தம்பதிகள் என அனைவரும் பங்கேற்கலாம்.
மனைவியைக் கவுரவிக்கும் விதமாக மட்டுமின்றி, கணவன் மனைவி உறவு மேம்படும் நோக்கில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தம்பதிகள், திரையில் காணும் கூகள் படிவதில் முன் பதிவு செய்யுங்கள்