Latestமலேசியா

லெங்கெங்கில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம்; குடியிருப்புவாசிகள் கவலை

சிரம்பான், அக் 24 –

லெங்கெங் Bandar Tasik Senangin னில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பது அங்குள்ள குடியிருப்புவாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளளது.

கல்லினால் உருவாக்கப்பட்டுள்ள அந்த நினைவுச் சின்னம் குறித்து புதன்கிழமையன்று தாம் புகாரை பெற்றதாக Lenggeng சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் அஸ்னா அமின் ( Moh Asna Amin) தெரிவித்தார்.

அந்த நினைவுச் சின்னத்தின் அளவு மிதமானதாக இருந்தாலும் அந்த இடத்தில் அது எழுப்பப்படுவதற்கு பொருத்தமான இடம் அல்ல. அதிகமான இடங்கள் இருந்தபோதிலும் அந்த இடத்தில் சம்பந்தப்பட்ட நினைவுச் சின்னம் ஏன் எழுப்பப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளதாக முகமட் அஸ்னா அமின் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து தாம் சிராம்பான் மாநகர் மன்றத்திற்கு தெரிவித்திருப்பதோடு மேல் நடவடிக்கை மற்றும் அந்த சின்னத்தை தகர்ப்பதற்கான நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

அதோடு அந்த நினைவுச் சின்னம் அந்த இடத்தில் எழுப்பப்பட்டதற்காக காரணமும் தங்களுக்கு தெரியவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் புதன்கிழமையன்று ஒரு பஸ்ஸிலிருந்து அதிகமான பயணிகள் இறங்கியதாகவும் அவர்கள் அங்கு வந்ததற்கான நோக்கமும் தனக்கு தெரியவில்லையென முகமட் அஸ்னா அமின் தெரிவித்தார்.

இது தொடர்பாக மற்றும் அந்த நிலத்தின் தகுதி குறித்து சிரம்பான் மாநகர் மன்றத்திடம் தாம் விளக்கம் பெறவிருப்பதாகவும் அவர் கூறினார். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை குடியிருப்பு வாசிகள் அமைதி காக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!