சிபு, ஜூன் 16 – சிபு, Belaga வில் Long Menjawah வில் படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த இருவர் காணவில்லையென அறிவிக்கப்பட்டது. ஒரு நிறுவனத்தின் ஐந்து தொழிலாளர்களை ஏற்றிச் சென்றபோது அந்த படகு ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது.
நீரில் ஒருவரின் செருப்பு மட்டுமே மிதந்து கொண்டிருந்தாகவும் மற்றொரு செருப்பு படகில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 36 வயதுடைய பாலவிஷ்னு பெர்மாளு ( Balavishnu Permaloo ) மற்றும் 30 வயதுடைய ரூபன் அப்பாரு ( Ruban Apparoo ) ஆகிய இருவரும் காணாமல்போனதை தொடர்ந்து அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அவ்விருவரும் கெடா , பாடாங் செராய் , சுங்கை கரங்கானை ( Sungai Karangan ) னை சேர்ந்தவர்களாவர். அவ்விருவருடன் வேலை செய்யும் மேலும் இருவரும் சென்ற அந்த படகு ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4 அளவில் மூழ்கியது.
Bakun அணைக்கட்டை பராமரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்களான அவர்கள் வாடகைக்கு எடுத்த படகின் மூலம் சுற்றிப் பார்க்க சென்ற வேளையில் Jeram Menjawah வில் ஏற்பட்ட நீர் பெருக்கினால் அந்த படகு மூழ்கியது. அந்த படகு ஓட்டுனர் அனைத்து பயணிகளையும் காப்பாற்றியபோதிலும் இருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தேடும் மற்றும் மீட்புக் குழுவினர் நேற்று காலை 7.55 மணியளவில் மீண்டும் தேடும் நடவடிக்கையை தொடர்ந்ததாக தீயணைப்பு வீரர்கள், போலீஸ் மற்றும் ரேலா தொண்டுழியர்களைக் கொண்ட மீட்புக் குழுவின் அதிகாரி தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பெய்துவரும் தொடர்ச்சியான மழையினால் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.