ஜொகூர் பாரு, ஏப்ரல் 24 – ஜொகூர் பாரு சுற்று வட்டாரங்களில் வீடுகளில் சிவப்பு சாயம் பூசி, பெட்ரோல் குண்டுகளை வீசி வந்த ahlong வட்டி முதலைக் கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 7 வரை அம்மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல் வேட்டையில், உள்ளூர் ஆடவர்களான அக்கும்பலைச் சேர்ந்த எழுவர் கைதாகினர்.
சந்தேக நபர்கள், வட்டி முதலைகளிடம் கூலி வாங்கிக் கொண்டு அவ்வேலையில் ஈடுபட்டு வந்ததாக அறியப்படுகிறது.
அவர்களில் ஐவர் மீது இன்று ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருப்பதை, ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் உறுதிபடுத்தினார்.
அந்த ஐவரின் கைது மூலம், 24 சம்பவங்களுக்குத் தீர்வுக் காணப்பட்டுள்ளது.
எஞ்சிய இருவர் மீதான விசாரணைகள் முழுமைப் பெற்றதும், அவர்கள் பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என குமார் சொன்னார்.