புது டெல்லி, ஜூலை 31 – தென்னிந்திய மாநிலமான கேரளாவின், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143-ஆக அதிகரித்துள்ளது.
காணாமல் போனவர்களை, தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நூறு பேர், இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
வயநாட்டை நேற்று மூன்று நிலச்சரிவுகள் உலுக்கியதை தொடர்ந்து, மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக NDRF தேசிய மீட்புப் படை, இராணுவம் உட்பட பல்வேறு அமைப்புகள் தற்சமயம் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, முண்டக்காய், சூரல்மாலா, அட்டமலா மற்றும் நூல்புழா ஆகியவை நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக திகழ்கின்றன.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு, குடிநீர் உட்பட இதர அத்தியாவசியப் பொருட்களை, இந்திய கடலோர காவல்படை அனுப்பி உதவி வருகிறது.