Latestமலேசியா

வலது கண்ணில் அறுவை சிகிச்சைக்காக சிலாங்கூர் சுல்தான் மருத்துவமனையில் அனுமதி

ஷா ஆலாம், ஜூலை-16, தனது வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்புரை (cataract) அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன், முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியிருப்பதாக, சிலாங்கூர் அரண்மனையின் அதிகாரப்பூர்வ facebook பக்கமான Selangor Royal Office தெரிவித்தது.

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த பிறகு சுல்தான் ஷாராஃபுடின் 10 நாட்களில் முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுல்தான் ஷராஃபுடின் ஏற்கனவே அதே அறுவை சிகிச்சையை இடது கண்ணில் மேற்கொண்டார்.

வலது கண்ணுக்கான அறுவை சிகிச்சை 8 மாதங்களாக தள்ளிப் போன நிலையில், தற்போது ஒருவழியாக அதனை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!