
சுங்கை பூலோ, ஜூலை-5 – சுங்கை பூலோ பாயா ஜெராசில் வளர்ப்புப் பெற்றோரால் சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
முன்னதாக சுயநினைவற்ற நிலையில் சுங்கை பூலோ மருத்துவமனையில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது இறந்துவிட்டதை உறுதிச் செய்தனர்.
எனினும் குழந்தையின் உடல் முழுக்க வீக்க காயங்களும் வாய் மற்றும் மூக்கில் காய்ந்துபோன இரத்தக் கறைகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சுங்கை பூலோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது.
உடனடியாகக் கைதான அத்தம்பதி, இன்று முதல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவர் என சுங்கை பூலோ போலீஸ் கூறியது.
முறையே 27,28 வயதுடைய இருவருக்கும் பழையக் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லையென்றும் உறுதிப்படுத்தப்பட்டது.