புத்ரா ஜெயா, மே 14 – பெட்டாலிங் ஜெயா மற்றும் Kepong கில் இம்மாதம் 9 ஆம் தேதி நான்கு இடங்களில் உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வாகனங்களின் 153 போலி கண்ணாடிகளை பறிமுதல் செய்தனர். புத்ரா ஜெயா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவினர் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்க தலைமை இயக்குநர் டத்தோ Azman Adam தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற புகார் மற்றும் தொடக்கக்கூட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினர்.
போலி முத்திரைகள் கொண்ட வாகனங்களுக்கான 153 போலி கண்ணாடிகள், அதற்கான வர்த்தக ஆவணங்கள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கண்ணாடிகளின் மொத்த மதிப்பு 40,200 ரிங்கிட் என Azman Adam தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த 20 மற்றும் 31 வயதுடைய இரண்டு தனிப்பட்ட நபர்கள் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டனர்.