Latestமலேசியா

வாகனமோட்டியிடம் கைத்துப்பாக்கியா? வைரலான ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

குவாலா திரங்கானு, ஜூன்-14, குவாலா திரங்கானுவில் கைத்துப்பாக்கி போன்ற பொருளை வைத்திருந்த வாகனமோட்டியை போலீஸ் தேடி வருகிறது.

நேற்று மாலை 4 மணிக்கு Jalan Sultan Mahmud சாலையில் வெள்ளை நிறக் காரில் சென்ற அவ்வாடவர், கையில் துப்பாக்கி போன்றதொரு பொருளை வைத்திருந்ததாக போலீசுக்கு இரு புகார்கள் கிடைத்திருக்கின்றன.

எனினும் பரவலாகப் பேசப்பட்டது போல் அது ஒரு கடத்தல் சம்பவம் அல்ல என
குவாலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஸ்லி மொஹமட் நூர் (Asisten Komisioner Azli Mohd Noor)கூறினார்.

அந்நபரை விசாரணைக்காகத் தேடி வருவதாகக் கூறிய Azli, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் போலீசை தொடர்புக் கொண்டு உதவுமாறுக் கேட்டுக் கொண்டார்.

அக்காரோட்டி, கைத்துப்பாக்கி போன்று காணப்படும் பொருளை கையில் பிடித்திருப்பதோடு, அபாயகரமாக வாகனமோட்டுவதைக் காட்டும் 38 வினாடி காணொலி முன்னதாக வைரலானது.

அதனைக் கடத்தல் சம்பவத்துடன் இணைத்துப் பேசும் சில குரல் பதிவுகளும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!