Latestமலேசியா

வாகன நிறுத்தும் விதிமுறையை மீறியதற்கு மேலவை உறுப்பினர் முகமட் ஹஸ்பி மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர், ஜூலை 25 – பாதசாரிகள் நடந்துசெல்லும் பாதையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதனை புகைப்படம் எடுத்துக்கொண்ட மேலவை உறுப்பினர் முகமட் ஹஸ்பி மூடா ( Mohd Hasbie Muda) அதற்கு மன்னிப்பு கோரியதோடு அதற்கான அபராதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்வருவதாகவும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இனி ஏற்படாது என அமனா இளைஞர் பிரிவின் தலைவருமான முகமட் ஹஸ்பி தெரிவித்தார். இதற்கு முன்னதாக வாகனம் நிறுத்தக்கூடாத இடமான நடைபாதையில் தனது வாகனத்தை முகமட் ஹஸ்பி நிறுத்தும் புகைப்படம் x வளைத்தளத்தில் பதிவானது.

வாகனத்தின் உரிமையாளர் என்ற முறயில் நடந்த சம்பவத்திற்கு தாம் ஆழ்ந்த வருத்தம் அடைவதோடு அதற்கு முழு பொறுப்பு எடுத்துக் கொள்வதாகவும், மற்றவர்களுக்கு ஏற்படுத்திய சிரமத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதோடு அபரதத்தை ஏறறுக்கொள்வதற்கும் முன்வருவதாக x தளத்தில் முகமட் ஹஸ்பி வெளியிட்டிருந்த பதிவு வைரலானது. கோலாலம்பூர் சிட்டி மையத்திற்கு அருகே நடைபாதை பகுதியில் நாடாளுமன்ற சின்னத்தின் பேட்ஜைக் கொண்ட வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை @jimmyNaj என்பவர் தனது x தளத்தில் பதிவிட்டிருந்தார். செனட்டர் ஒருவர் சட்டவிரோதமாக தனது வாகனத்தை நிறுத்தியிருந்தது குறித்து பலர் x தளத்தில் தங்களது ஏமாற்றத்தை தெரிவித்திருந்ததோடு முறையான இடத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு தங்களது வாகன நிறுத்தும் அலவன்ஸ்சை எம்.பிக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். அதிக சம்பளம் பெறுவதோடு விலையூர்ந்த காரை வைத்திருக்கும் அவரால் வாகன நிறுத்துவதற்கான கட்டணத்தை செலுத்த முடியதா ? என மற்றொரு x பயனர் கேள்வி எழுப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!