Latestமலேசியா

விதிமுறையை மீறியது நீங்கள், விளைவை அனுபவித்து தான் ஆக வேண்டும்; முஹிடினுக்கு அன்வார் பதில்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-29 – பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை என மீண்டும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பஹாங் அரண்மனை செய்த போலீஸ் புகாரின் அடிப்படையிலேயே முஹிடின் மீது விசாரணைத் தொடங்கியது.

இதில் அரசாங்கம் எங்கிருந்து மூக்கை நுழைத்தது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வியெழுப்பினார்.

“விதிமுறைகளை மீறியது நீங்கள், தவறாகப் பேசியது நீங்கள், ஆக அவற்றுக்கான விளைவையும் நீங்கள் தானே சந்திக்க வேண்டும்” என முஹிடினை மேற்கோள் காட்டி அன்வார் பேசினார்.

அவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டும்; நீதிமன்றத்திடமே விட்டு விடுங்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அன்வார் பதிலளித்தார்.

முஹிடின் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் புத்ராஜெயா இல்லையென, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் நேற்று தெளிவுப்படுத்தியிருந்தார்.

கடந்தாண்டு கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் மீது சிலாங்கூர் அரண்மனை செய்த போலீஸ் புகாரைப் போன்றதே, இந்த முஹிடின் விவகாரமும் என ஃபாஹ்மி கூறினார்.

கிளந்தான், நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நிந்தனைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை, முன்னாள் பிரதமருமான முஹிடின் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!