Latestமலேசியா

விபரீதமாக மாறிய தற்கொலை முயற்சி; ஜப்பானில் 12வது மாடியிலிருந்து குதித்த நபர் விழுந்து பெண் பலி

தோக்யோ, ஜூலை-23-துரதிஷ்டம் முன்னறிவிப்பின்றி வரும் எனக் கூறுவர். அத்தகையதொரு சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது. Nagoya நகரில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 12-வது மாடியிலிருந்து கீழே விழுந்த நபர் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

23 வயதான Houra Inaba எனும் அப்பெண், அக்குடியிருப்புக்கு அருகிலுள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

கட்டிடம் ஒன்றிலிருந்து ஒருவர் கீழே விழுந்ததாகவும், அதனால் தன்னுடன் நடந்து வந்த தோழி காயமடைந்ததாகவும் கூறி தங்களுக்கு முதலில் பெண் ஒருவரிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாக காவல் துறை கூறியது.

மாடியில் இருந்து கீழே விழுந்த நபரும், அவர் மோதி காயமடைந்த Inabaவும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இருப்பினும், கடுமையான காயங்கள் காரணமாக Inaba உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும் மாடியில் இருந்து விழுந்த ஆடவர், சுயநினைவற்ற நிலையில், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்டிடத்தின் 12-வது மாடியிலிருந்து அவர் தவறி விழுந்தாரா அல்லது தானாகவே குதித்தாரா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜப்பானில் இத்தகையச் சம்பவம் நிகழ்வது இது முதல் முறையல்ல. 2024 ஆம் ஆண்டு Yokohamaவிலும் 2020 ஆம் ஆண்டு Osakaவிலும் அதே போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அச்சம்பவங்களிலும் பாதசாரிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!