ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 8 – விமானப் பணிப்பெண்ணாக வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரை ஏமாற்றிய குற்றச்சாட்டை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முடிதிருத்தனர் ஒருவர், மறுத்துள்ளார்.
37 வயதான தான் சுன் ஹூய் (Tan Chun Hooi) எனும் அந்த முடித்திருத்தனர், கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்சில் விமானப் பணிப்பெண்ணாக வேலை வாங்கி தருவதாக 38 வயது பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடமிருந்து 358,015 ரிங்கிட்டையும் அவர் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி அல்லது அபராதமும் விதிக்கப்படலாம்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்டர் குற்றத்தை மறுத்து வாதிட்டதோடு, தனது வயதான பாட்டிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 5,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
அதேவேளையில், மீண்டும் இந்த வழக்கு செப்டம்பர் 12 திகதி செவிமடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.