
வியட்னாம், Phu Quoc தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் சடலங்கள் மும்பை கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. Ho Chi Minh Cityயில் இருந்து சலடங்களை ஏற்றிச் சென்ற விமானம், நேற்றிரவு 9.19 மணியளவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த 15 பேரில், 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மூவர் ஆந்திரப் பிரதேசத்தையும் மேலும் இருவர் கேரளாவையும் சேர்ந்தவர்கள். பலியானவர்களில் இருவர் பெண்கள். அனைவரின் சடலங்களும் சொந்த ஊர்களுக்குக் கொண்டுச் செல்லப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிகிழமை Phu Quoc தீவுக்கு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகளையும் நான்கு உள்ளூர் பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற வேகப் படகொன்று எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது. அதில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். அச்சம்பவத்தில் மீட்கப்பட்ட மேலும் பதினாறு பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பியுள்ளனர். அதே சமயம், உயிர் தப்பிய ஒருவர் Phu Quocக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



