Latestஉலகம்

விரைவில் ஒப்பந்தம் இல்லை என்றால் கடுமையான தாக்குதல்: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன், மே-8 – ஈரான் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், மேலும் கடுமையான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Hormuz நீரிணையில் அமெரிக்க கடற்படையின் 3 போர்க்கப்பல்களுக்கு எதிராக ட்ரோன், ஏவுகணை மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் பந்தர் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவு பகுதிகளில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வாஷிங்டனில் பேசிய ட்ரம்ப், இந்த தாக்குதல் ‘சிறிய எச்சரிக்கை’ மட்டுமே என கூறியதுடன், போர் நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவில்லை என்றால், அடுத்த தாக்குதல் ‘மிகவும் கடுமையானதாக இருக்கும்’ என்றார் அவர்.

இதற்கிடையில், அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பதற்றத்தை அதிகரிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து Hormuz-சில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!