
கோலாலம்பூர், மே 22 – கோலாலம்பூரில் உள்ள MRT அல்லது LRT கட்டண வாயிலில், டோக்கன் வாங்குவதற்குப் பதிலாகவோ அல்லது காரில் விட்டு வந்த டச் ‘என் கோ (Touch ‘n Go) கார்டைத் தேடுவதற்குப் பதிலாக பயனர்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நேரடியாகப் பயணம் செய்யும் வசதியை விரைவில் பெறுவார்கள்.
தனது அனைத்து ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், கியூஆர் குறியீடுகள், மொபைல் வாலெட்டுகள் உள்ளிட்ட திறந்த கட்டண முறையை, நேரடியாகத் தட்டி உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதை பொது போக்குவரத்து நடத்துனரான Prasarana Malaysia Berhad விளக்கம் அளித்துள்ளது.
ஒரு திறந்த கட்டண முறையைச் செயல்படுத்துவதில் பிரசரானா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் தற்போது ஒப்பந்தம் வழங்கும் கட்டத்தில் உள்ளது, விரைவில் இந்த திறந்த கட்டண முறை இறுதி வடிவம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
பயணிகள் தடையற்ற பயணத்திற்காக கிரெடிட்/டெபிட் கார்டுகளையும், இறுதியில் மொபைல் வாலெட்டுகளையும் பயன்படுத்த இந்த முயற்சி அனுமதிக்கும்.
திறந்த கட்டண முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளதோடு , இது அதன் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இரண்டிற்கும் வழங்கப்படும்.
இதைச் செயல்படுத்தும் கால அட்டவணை, ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கான பரவலான திறந்த கட்டண முறையைச் செயல்படுத்தும் திட்டத்துடன் ஒத்துப்போகும் என்றும் பிரசரானா தெரிவித்தது.



