‘விவிஐபி’ கேளிக்கை மையத்தில் 152 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலாம்பூர், மே-16,
கோலாலம்பூரில் ‘உயர் தர’ வாடிக்கையாளர்களுக்காக இயங்கியதாக கூறப்படும் ஒரு கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 152 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு விபச்சார நடவடிக்கைகள் நடந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
தனியார் அறை சேவைகளுக்கான கட்டணம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரிங்கிட் வரை இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அடங்குவர்.
விசா விதிமீறல், அனுமதிக்கப்பட்ட காலத்தை மீதி தங்கியது மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாதது போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டன.
இந்நடவடிக்கை பல வாரங்கள் உளவுத்துறை கண்காணிப்புக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கைதுச் செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.



