Latestமலேசியா

TVET கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து TAFE கல்லூரிக்கு மானியம்; இந்திய மாணவர்களுக்கான TVET கல்வி வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சி – ஷாஹிட்

மக்கோத்தா, செப் 23 – இந்திய மாணவர்கள் TVET கல்வி வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்பதில் அரசாங்கம் மிக கவனமாக இருக்கிறது. அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்திருப்பதோடு, வாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாக கூறியுள்ளார் துணைப்பிரதமர் ஷாஹிட் ஹமிடி.

அதில் ஒரு பகுதியாக TVET கல்விக்கான நிதி ஒதுக்க்கீட்டிலிருந்து TAFE கல்லூரிக்கு மானியம் வழங்கப்பட்டு அங்கு இந்திய மாணவர்களுக்கான TVET கல்வி வாய்ப்பை அதிகரிப்பது அடங்கும் என நேற்று ஜோகூர் மக்கோத்தாவில் இந்தியர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பேசிய போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இதனிடையே, நாம் மதிக்கப்பட வேண்டும் என்றால், முதலில் பிற மதத்தையும் மதத்தினரையும் மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என பேசிய ஷாஹிட், வாக்காளர்கள் நமக்கு வாக்களித்து நம்மை கைவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய, அவர்களுக்கான நமது சேவை தரமாக இருக்க வேண்டும். இது நடந்தால், நம்மை வெற்றியடைச் செய்வதில் மக்களே போராடுவார்கள் என குறிப்பிட்டார்.

நமது சேவை தரமாக இருப்பின், யார் நம்மை எப்படி தூற்றினாலும், மக்கள் நம்மீதான நம்பிக்கையை கைவிடமாட்டார்கள். இது எனது அனுபவம். என் பகான் டத்தோ மக்கள் என்னை கைவிடவில்லை. அது போலத்தான் நீங்களும் இங்கே நல்ல சேவையை வழங்க வேண்டும்” என மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலின் தேசிய முன்னணி வேட்பாளரான Syed Hussein Syed Abdullah-வுக்கு நினைவுறுத்தினார் துணைப்பிரதமர்.

நம்மை நம்பி வாக்களித்த மகளுக்கு துரோகம் மட்டும் செய்யக்கூடாது என ஆயிரக்கணக்கான் இந்தியர்கள் முன்னிலையில் தேர்தல் வேட்பாளருக்கு தனது மற்றும் கூட்டணியின் எதிர்ப்பார்ப்பையும் மு வைத்தார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!