கோலாலம்பூர், ஏப்ரல் 5 – அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் வெப்ப பக்கவாததால், நாட்டில் மேலும் ஒரு உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
அதனை தொடர்ந்து, இதுவரை அதீத வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதலாம் தேதி பதிவுச் செய்யப்பட்ட அந்த உயிரிழப்பு, கிளந்தானை சேர்ந்த மூன்று வயது குழந்தையை உட்படுத்தியது ஆகும்.
ஏப்ரால் நான்காம் தேதி, NADMA – தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன், பிப்ரவரி இரண்டாம் தேதி, வெப்ப பக்கவாதம் காரணமாக, பஹாங்கை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிந்தார்.
ஏப்ரல் மூன்றாம் தேதி வரையில், நாட்டில் அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் நோய்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ள வேளை ; அதில் இருவர் இன்னும் அவசர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக எண்மர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.