Latestமலேசியா

‘வெற்று’ பாஸ்போர்ட் பயன்படுத்தி குடியுரிமை விதிகளை மறைத்த வெளிநாட்டவர் கைது

கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், புதிய பாஸ்போர்ட்களை “வெற்று” stamps அல்லது endorsements இல்லாமல் பயன்படுத்தி தங்களது முந்தைய குடியுரிமை பதிவுகளை மறைக்கின்றனர் என்பதனை சிலாங்கூர் குடியுரிமை துறை கண்டுபிடித்துள்ளது.

கோலாலம்பூரில் வெளிநாட்டுத் தூதரகங்கள் வழங்கிய மூன்று வெற்று பாஸ்போர்ட்கள், உரிமையாளர்களின் பழைய குடியுரிமை பதிவுகளை மறைக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் குடியுரிமை துறை இயக்குநர் கெய்ருல் அமினுஸ் கமாருடின் (Khairrul Aminus Kamaruddin) தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்களின் பழைய பாஸ்போர்ட்கள் காலாவதியாகிவிட்டதாக கூறி, புதிய பாஸ்போர்ட்களை இங்கே விண்ணப்பித்துள்ளனர். சட்டப்படி அவர்கள் மலேசியாவில் சட்டபூர்வமாக தங்கி இருந்தால், பழைய endorsements-ஐ புதிய பாஸ்போர்ட்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் 2023 முதல் புதுப்பித்தவர்கள் இதனைச் செய்யவில்லை என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவின் பெலாங்கி டாமான்சாரா பகுதியில் நடைபெற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கையில் கலந்து கொண்டபோது , கடைப்பிதழ்களை வைத்திருந்தாலும், செல்லுபடியான வேலை அனுமதி (work pass) இல்லாமல் தங்குவதும் குடியுரிமை சட்டத்திற்கு கீழ் உட்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

சட்டவிரோதமாக தங்கிய வெளிநாட்டவர்கள், சிலாங்கூரில் உள்ள குடியுரிமை அலுவலகங்களுக்கு சென்று சுயமாகவே உண்மையைக் கூற முற்பட்டால் Migrant Repatriation Programme எனப்படும் திட்டத்திற்கு கீழ் அவர்கள் கைதாகாமல் தத்தம் நாடுகளுக்கு திரும்பக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!